லத்தூர் ஒன்றியம் 10 வது வார்டில் 5 முனைப் போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 10 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 5 முனைப் போட்டி நிலவுகிறது.

Update: 2021-10-03 13:30 GMT

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் சித்ரா

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 10 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக ஜோதி, திமுக சார்பில் சித்ரா, அம்மா மக்கள் முன்னேற்றகழகம் சார்பில் சந்திரலேகா, நாம் தமிழர் கட்சி சார்பில் சசிரேகா, பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மாலா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

லத்தூர் 10 வது வார்டில், திமுக, அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் அனல் பறக்கிறது.

Tags:    

Similar News