மண்ணிவாக்கம் ஊராட்சி தலைவராக கெஜலெட்சுமி வெற்றி
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மண்ணிவாக்கம் ஊராட்சி தலைவராக கெஜலெட்சுமி வெற்றிப் பெற்றார்.;
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மண்ணிவாக்கம் ஊராட்சி தலைவர் பதவிக்கு கெஜலெட்சுமி சண்முகம், சாந்தி புருஷோத்தமன் ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவியது.
இதில் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட கெஜலெட்சுமி 7.021 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சாந்தி புருஷோத்தமனை விட ஐந்து ஆயிரம் வாக்கள் அதிகமாக பெற்று கெஜலெட்சுமி வெற்றிப் பெற்றார். இதன் மூலம் இவர் ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். வரும் 16ம் தேதி ஊராட்சி தலைவராக பதவி ஏற்கிறார்.