செங்கல்பட்டு மாவட்டத்தில், 157 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 2527 குளங்களில் 157 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தகவல்
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் கனமழையால் பல குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 1527 குளங்களில், 157 குளங்கள் 100 சதவிகித கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மொத்தமுள்ள 2527 குளங்களில், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில், உள்ள 1069 குளங்களில் 6குளங்கள் 75 சதவிகிதமும், 201 குளங்கள் 50 சதவிகிதமும், 119 குளங்கள் 25 சதவிகித கொள்ளளவை எட்டியுள்ளது.
திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள 421 குளங்களில் 2 குளங்கள் 75 சதவிகித கொள்ளளவும், 60 குளங்கள் 50 சதவிகிதமும், 374 குளங்கள் 25 சதவிகித கொள்ளளவும் எட்டியுள்ளது.
பரங்கிமலை ஒன்றியத்தில், உள்ள 57 குளங்களில், 23 குளங்கள் 50 சதவிகிதமும், 34 குளங்கள் 25 சதவிகித கொள்ளளவை எட்டியுள்ளன.
திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில், மொத்தம் 391 குளங்கள் உள்ளன. இதில், 3 குளங்கள் 75 சதவிகித கொள்ளளவும், 38 குளங்கள் 50 சதவிகிதமும், 350 குளங்கள் 25 சதவிகித கொள்ளளவும் எட்டியுள்ளன.
அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில், உள்ள 431 குளங்களில், 46 குளங்கள் 100 சதவிகித கொள்ளளவை எட்டியுள்ளது. 131 குளங்கள் 50 சதவிகிதமும், 165 குளங்கள் 25 சதவிகித கொள்ளளவும் நிரம்பியுள்ளது.
அதேபோல், மதுராந்தகம் ஒன்றியத்தில், உள்ள 438 குளங்களில் 43 குளங்கள் 100 சதவிகித கொள்ளளவை எட்டியுள்ளது. 137 குளங்கள் 75 சதவிகிதமும், 172 குளங்கள் 25 சதவிகித கொள்ளளவும் நிரம்பியுள்ளது.
சித்தாமூர் ஒன்றியத்தில், உள்ள 271 குளங்களில், 32 குளங்கள் 100 சதவிகித கொள்ளளவை எட்டியுள்ளன. 51 குளங்கள் 75 சதவிகித கொள்ளளவும், 88 குளங்கள் 50 சதவிகித கொள்ளளவும், 100 குளங்கள் 25 சதவிகித கோள்ளளவை எட்டியுள்ளது.
அதேபோல் லத்தூர் ஒன்றியத்தில், உள்ள 303 குளங்களில் 36 குளங்கள் 100 சதவிதத்தை எட்டியுள்ளது. 62 குளங்கள் 75 சதவிகிதமும், 92 குளங்கள் 50 சதவிகிதமும், 113 குளங்கள் 25 சதவிகித கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.