மதுராந்தகம் ஒன்றியம் 3 வது வார்டில் திமுக –அதிமுக நேரடி மோதல்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 3வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக, அதிமுக நேரடியாக மோதிக் கொள்கிறது.;

Update: 2021-10-01 11:55 GMT

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தமிழரசி.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 3வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் தமிழரசி, திமுக சார்பில் விமல்  ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மதுராந்தகம் 3 வது வார்டில், அதிமுக, திமுக இடையே மட்டும் போட்டி நிலவுவதால், அங்கு பிரசாரம் அனல் பறக்கிறது.

Tags:    

Similar News