சித்தாமூர் ஒன்றியம் 4வது வார்டில் 6 முனைப்போட்டி
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 4வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 6 முனைப்போட்டி நிலவுகிறது.;
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 4வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் கிருஷ்ணமூர்த்தி, திமுக சார்பில் நாகப்பன், தேமுதிக சார்பில் சந்திரகாந்தன், நாம் தமிழர் கட்சி சார்பில் வினோத், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விநாயகம் , அம்மா மக்கள் சுயேட்சை வேட்பாளராக பகதூர் சேட் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
4வது வார்டில் 6 முனை போட்டி என்பதால் ஒன்றிய கவுன்சில் பகுதியில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.