சித்தாமூர் ஒன்றியம் 14 வது வார்டில் 6 முனைப்போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 14வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 6 முனைப்போட்டி நிலவுகிறது.

Update: 2021-10-01 06:01 GMT
ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாரதி.

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 14வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் பாரதி, அதிமுக சார்பில் பரமேஸ்வரி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜீவா, தேமுதிக சார்பில் ரம்யரசி, நாம் தமிழர் கட்சி சார்பில் குமாரி, சுயேட்சை வேட்பாளராக சிவசங்கரி ஆகியோர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சித்தாமூர் 14 வது வார்டில் திமுக, அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, நாம் தமிழர் கட்சி ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

Tags:    

Similar News