Earthquake: செங்கல்பட்டில் நில அதிர்வு: ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு
Earthquake: செங்கல்பட்டை மையமாகக்கொண்டு 3.2 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
Earthquake: செங்கல்பட்டை மையமாகக்கொண்டு 3.2 ரிக்டர் அளவில் லேசான இன்று காலை 7.39 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தை மையமாகக் கொண்டு இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. இன்று காலை 7.39 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சுமார் 100 கி.மீ. சுற்றளவு வரை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதிகளிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. இன்று காலை 6:52 மணிக்கு இப்பகுதியில் நடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் கூறுகையில், "நிலநடுக்கம் ரிக்டர்: 3.1, 8-12-2023, 06:52:21 IST, லேட்: 16.77 மற்றும் நீளம்: 75.87, ஆழம்: 10 கிமீ, இருப்பிடம்: விஜயபுரா , கர்நாடகா."
நிலநடுக்கம் 16.77 அட்சரேகை மற்றும் 75.87 தீர்க்கரேகையில் கருதப்படுகிறது. நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.