செங்கல்பட்டு அருகே வெறிநாய் கடித்து சிறுவன் உட்பட 7 பேர் படுகாயம்

செங்கல்பட்டு அருகே 2 நாட்களில் வெறிநாய் கடித்ததால் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-09-23 03:58 GMT
தெரு நாய்கள் (கோப்பு படம்)

ரேபீஸ்'தான். ரேபீஸ் எனும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது வெறிநாய்க்கடி (Rabies) நோய். நாய் கடித்தால் மட்டுமே இந்த நோய் ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். அப்படியில்லை. இந்தக் கிருமிகள் நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வவ்வால் போன்ற பாலுாட்டிகள் பலவற்றில் வசிக்கும். இவற்றில் ரேபீஸ் கிருமி உள்ள எந்தவொரு பாலூட்டி மனிதரைக் கடித்தாலும் வெறிநாய்க்கடி நோய் வரும். இந்தியாவில், முறையாகத் தடுப்பூசி போடப்படாத தெருநாய் கடிப்பதால்தான் 95 சதவிகிதம் இந்த நோய் ஏற்படுகிறது. அதனால்தான் இதனை 'வெறிநாய்க்கடி நோய்' என்கிறோம்.

செங்கல்பட்டு அடுத்த வளர்குன்றம் கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் அதிகளவில் தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. பஜனை கோவில் தெருவை சேர்ந்த ஜெயக்கொடி என்ற மூதாட்டி தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று மூதாட்டியை கடித்துள்ளது.

தொடர்ந்து அதே கிராமத்தில் தெருவில் நடந்து சென்ற 14 வயது சிறுவன், மூன்று பெண்கள் உட்பட ஏழு பேரை உடலில் பல்வேறு இடங்களில் வெறிநாய் கடித்துக் குதறியுள்ளது. இதனையடுத்து, வெறி நாய் கடிபட்ட அனைவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கிராமத்தில் அதிகரித்து வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2 நாட்களில் வெறிநாய் கடித்து 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News