செங்கல்பட்டு 10வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 6 முனை போட்டி
காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம் 10வது வார்டு மாவட்ட கவுன்சிலருக்கு திமுக, அதிமுக, தேமுதிக என 6 முனை போட்டி நிலவுகிறது.
காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம் 10வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலருக்கு திமுக சார்பில் மாலதி, அதிமுக சார்பில் பிரமிளா, தேமுதிக சார்பில் பவானி, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கிரிஜா லெட்சுமி, நாம்தமிழர் கட்சி சார்பில் ரேவதி, சுயேட்சை வேட்பாளர் மகேஷ்வரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த பகுதியில் 6 முனை போட்டி நிலவுகிறது. இதில் திமுக, அதிமுக வேட்பாளர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு இணையாக தேமுதிக, நாம்தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி, சுயேட்சை வேட்பாளர் ஆகியோர் களத்தில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.