100 வயதை கடந்து 5 தலைமுறை கண்ட பாட்டி..!

ராமனாதபுரத்தை சேர்ந்த மூதாட்டி 100 வயதை தாண்டி ஐந்து தலைமுறை கண்டுள்ளார்.;

Update: 2024-02-06 05:21 GMT

ஐந்து தலைமுறை கண்ட நூறு வயது பாட்டியுடன் அவரது உறவுகள்.

ஆரோக்கிய வாழ்வு குறித்து எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், இன்றைய சூழலில் மாத்திரை பெட்டியுடன் அலைபவர்கள் தான் மிக அதிகம். அதுவும் கொரோனாவிற்கு பின்னர் தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இறப்பு விகிதம் சற்று அதிகரித்து வருகிறது என டாக்டர்களே  தெரிவித்துள்ளனர்.

பிளக்ஸ் கலாசாரம் வந்த பின்னர், ஒவ்வொரு நகரிலும் தினமும் எந்தெந்த பகுதியில் யார்? யார்? இறந்துள்ளனர் என்ற விவரம் வெளிப்படையாகவே மக்களுக்கு தெரிகிறது. இதனால் பலரும் வாழும் போது நன்றாக வாழ்வோம் என நி னைத்தாலும், விதி நினைத்தபடி யாரையும் வாழ விடுவதில்லை. அதெல்லாம் கடந்து சிலருக்கு இறைவன் அருள் பரிபூரணமாக கிடைத்திருப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட ஒருவர் தான் இந்த செய்தியில் இடம் பெற்றுள்ள பாட்டி.


ராமநாதபுரம் மாவட்டம் காளிகாதேவி அம்மன் கோவில் தெரு பகுதியில் வசித்து வருபவர் பாப்பம்மாள். இவர் 1924-ம் ஆண்டு பிறந்தார். இவருக்கு 6 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவர்களை நன்கு படிக்க வைத்து திருமணமும் முடிந்து பல ஊர்களில் வசித்து வருகின்றனர்.

நூறு வயது: தற்போது ஐந்து தலைமுறைகளை கண்டதோடு, 50-க்கும் மேற்பட்ட பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன், பேத்திகளோடு இவர் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், பல்வேறு ஊர்களில் வசிக்கும் மகன், மகள், பேரன், பேத்திகள், மூதாட்டி பாப்பம்மாள் நூறு வயதை கடந்ததை கொண்டாடும் வகையில், பிறந்த நாள் விழா கொண்டாட முடிவு செய்தனர்.

இதையொட்டி அனைவரும் ராமநாதபுரத்தில் மூதாட்டி பாப்பம்மாள் வீட்டுக்கு வந்தனர். அவருக்கு ரூபாய் நோட்டு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி, பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தடபுடலாய் விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News