வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்....

செந்தில் என்ற வாலிபர் நடைபயணம் செய்யும் மக்களை குறி வைத்து வியாபாரம் நடத்தி மிகவும் சிறப்பாக வருவாய் ஈட்டி வருகிறார்.

Update: 2023-06-21 10:45 GMT

தேனி மாஸ்டர் பிளான் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் அதிகாலையே ஜூஸ், சூப் விற்பனைக்கு தயாரான செந்தில்.

தேனி ஒரு லட்சம் பேர் மட்டும் வசிக்கக்கூடிய மிகவும் சிறிய ஊராக இருந்தாலும், இங்கு சிறப்பான பல வசதிகள் உள்ளன. குறிப்பாக நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்களுக்கு நல்ல முறையில் பாதுகாப்பான ரோடுகள் பல இடங்களில் உள்ளன. தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து மாஸ்டர் பிளான் காம்ப்ளக்ஸ் வழியாக, ஆயுதப்படை மைதானத்திற்கு செல்லும் சாலையை  அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். இந்த சாலை  மிகவும் பாதுகாப்பானது. அதிகாலையில் சுத்தமான ஆக்ஸிஜன் நிறைந்தது. இயற்கை சூழல் நிறைந்தது.

நடைபயிற்சி செல்பவர்களுக்கு அதிகாலையில் குடிக்க மூலிகை ஜூஸ், சூப் வகைகள் விற்பனை செய்கிறார் பெரியகுளம் வடகரையை சேர்ந்த செந்தில், 45. பெரியகுளம் தேனியில் இருந்து 16 கி.மீ., துாரம் உள்ளது. செந்தில் தினமும் அதிகாலை 2.30 மணிக்கு எழுந்திருக்கிறார். அவருடன் அவரது மனைவியும் விழித்து விடுவார். இவர்கள் முருங்கை, வல்லாரை, கொள்ளு, மிளகுதக்காளி, பூண்டு, கீழா நெல்லி, சிறுதானியர்கள், வெந்தய மோர், கற்றாலை ஜூஸ், பொன்னாங்கன்னி கீரை சூப், மிளகுதக்காளி கீரை சூப், யானை நெருஞ்சி ஜூஸ் உட்பட 15 வகையான சூப், மற்றும் ஜூஸ் வகைகள் தயாரிக்கின்றனர். தயாரித்து முடித்ததும், காலை 5.30க்கு டூ வீலரில் அத்தனையும் எடுத்துக் கொண்டு மாஸ்டர் பிளான் காம்ப்ளக்சிற்கு வந்து விடுகிறார். ரோட்டோரம் பாதுகாப்பான இடத்தில் கடை போடுகிறார். அதிகாலை நடைபயிற்சி செய்பவர்கள் வாங்கி சாப்பிடுகின்றனர். சூப் வகைகள் அத்தனையும் 20 ரூபாய், ஜூஸ் வகைகள் அத்தனையும் 15 ரூபாய் என விற்கிறார். காலை 9.30 மணி வரை வியாபாரம் செய்கிறார். நல்ல முறையில் வருவாய் ஈட்டுகிறார்.

இங்கு இவரது முயற்சியும், இவரது மனைவியின் முயற்சியும் கவனிக்கத்தக்கது. பகல் முழுக்க மூலப்பொருட்களை சேகரித்து, அதனை சூப் தயாரிக்க அல்லது ஜூஸ் தயாரிக்க தயார் நிலையில் வைக்கின்றனர். பின்னர் அதிகாலை 2.30 மணிக்கு எழுந்து கணவன், மனைவி இருவரும் சேர்ந்து அத்தனையும் தயாரிக்கின்றனர். பின்னர் இவ்வளவையும் டூ வீலரில் எடுத்துக் கொண்டு 16 முதல் 18 கி.மீ., துாரம் பயணித்து நடைபயிற்சி நடக்கும் இடத்திற்கு வந்து சேருகிறார்.

அங்கு வியாபரம் செய்கிறார். இவரிடம் சூப்பின் தரமும், ஜூஸ் வகைகளின் தரமும் சூப்பராக உள்ளது. இதனால் நடைபயிற்சி செல்பவர்கள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். செந்திலின் இந்த முயற்சியை அத்தனை பேரும் பாராட்டுவதோடு, அவரை ஊக்கப்படுத்தும் வகையில் வாங்கியும் சாப்பிடுகின்றனர். நாமும் செந்தில் முயற்சியையும், உறுதுணையாக இருக்கும் அவரது மனைவியின் முயற்சியையும் பாராட்டுவோம்.

Tags:    

Similar News