பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று தொடங்குகிறது

தமிழக பொதுபட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம், தமிழக சட்டப்பேரவையில் இன்று தொடங்குகிறது.;

Update: 2022-03-21 01:00 GMT

தமிழக சட்டசபையில், 2022-2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 18-ம் தேதி தாக்கல் செய்தார். அடுத்த நாள், 19ம் தேதி 2022-2023-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் , தமிழக சட்டப்பேரவையில் இன்றில் இருந்து தொடங்குகிறது. இன்று பேரவை கூடியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், பிரபலங்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.

அதை தொடர்ந்து, கேள்வி நேரமும், பின்னர் பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. இரண்டு நாள் பட்ஜெட் விவாதத்திற்கு பின்னர், வரும் 24-ம் தேதி, 2022-2023-ம் ஆண்டின் செலவிற்கான முன்பண மானிய கோரிக்கையும், 2021-2022-ம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையும் அவை முன் வைக்கப்பட இருக்கிறது.

தொடர்ந்து, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோ பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளிக்க உள்ளனர்.

Tags:    

Similar News