எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்

ஊழலை ஒழிப்போம் என்று வாய் அளவில் பேசாமல், ஊழல் செய்த எதிர்கட்சி தலைவர்களை குறி பார்த்து பா.ஜ.க., சரியாக அடிக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Update: 2024-03-29 04:06 GMT

பைல் படம்

ஊழலை ஒழிப்போம் என்று வாய் அளவில் பேசாமல், ஊழல் செய்த எதிர்கட்சி தலைவர்களை குறி பார்த்து பா.ஜ.க., சரியாக அடிக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில், மக்களின் உரிமைகள், உடைமைகள் அனைத்தும் சூரையாடப்பட்டுள்ளன. எனினும், ஓரளவு அதிகார உரிமைகள் எதிர்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு மிச்சமிருந்தது. இந்நிலையில், எதிர்கட்சிகளின் அதிகாரத்தையும் பறிக்கும் வகையில், மத்திய பா.ஜ.க.வின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

இந்தியா விடுதலையடைந்ததற்கு பின், மக்களாட்சி முறைப்படி, மக்களால் தேர்தெடுக்கப்படுபவர் ஆட்சியில் அமர்ந்து, மக்களுக்கான பணிகள் முன்னெடுக்க வேண்டும் என்ற முறை, இந்திய அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்டது.

எனினும், இந்திய அரசியலமைப்பில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் பா.ஜ.க, மக்களாட்சி என்ற அடிப்படை முறையிலும் ஊழலுக்கு எதிரான மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. உதாரணமாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியை சார்ந்த வேட்பாளரை அல்லது மக்கள் பிரதிநிதியை தவறு செய்தால் பா.ஜ.க., விட்டு வைக்கவில்லை. இந்த விஷயத்தில் மிகவும் தெளிவாக காய் நகர்த்தி வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் இந்தியா கூட்டணியில் பங்கு கொண்டுள்ள சிவசேனா (UBT) கட்சி நிர்வாகி அமொல் கிர்டிகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்றே, அமலாக்கத்துறை மூலம் ரெய்டு நடத்தியது பா.ஜ.க.,

இவ்வாறு, கட்சியின் தலைவர்கள் மட்டுமல்ல, நிர்வாகிகள் ஊழல் செய்தாலும் தப்பவே முடியாது என்ற நிலையை பா.ஜ.க., உருவாக்கி விட்டது. இந்நடவடிக்கைகள், அரசியலமைப்பிற்கு புறம்பான நடவடிக்கைகள் என்று பல தேசிய ஊடகங்கள் மக்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிற நிலையிலும், தனது ஊழலுக்கு எதிரான போராட்ட அரசியலை தொடர்ந்து செயலாற்றி வருகிறது பா.ஜ.க.

தோல்வி அடையமாட்டோம், என்ற எண்ணத்த்தில் இவ்வகை செயல்களில் ஈடுபடும் பா.ஜ.க. தனது கட்சி உறுப்பினர்களையும், கூட்டணி கட்சி உறுப்பினர்களையும் கவனமுடன், நேர்மையுடன் செயல்பட வேண்டும். ஊழலில் சிக்கி விடக்கூடாது என அறிவுறுத்தவும் தவறவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் இரண்டு மாநில முதல்வர்கள், பல மாநில அமைச்சர்கள், பல மாநில கட்சி முன்னாள் நிர்வாகிகள் சிறையில் உள்ளனர். ஊழலுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுவடையுமே தவிர குறையாது என பிரதமர் மோடி கூறியது உண்மையாகி வருகிறது. ஊழலை முழுவதுமாக களையெடுக்க வேண்டும் என்பதிலும் மத்திய பா.ஜ.க., அரசு தீவிர முனைப்புடன் உள்ளது. தேர்தல் வெற்றி, தோல்விகளை பற்றி கவலைப்படவில்லை எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News