தமிழகத்தில் குட்கா, பான் மசாலாவுக்கு மேலும் ஓராண்டு தடை

குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடையை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.;

Update: 2022-05-27 06:45 GMT

புகையிலைப் பொருட்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பவை. புகையிலை பொருட்களில் உள்ள நிக்கோடின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியது. புற்று நோயை உண்டாக்கும் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் தயாரித்தல், விநியோகித்தல், பதுக்கல் போன்றவற்றிற்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல், இந்த தடை அமலில் உள்ளது.

இந்நிலையில், இந்த தடை உத்தரவு கடந்த மே 23ம் தேதியுடன் காலாவதியானது. இதையடுத்து, தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்களுக்கான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. 

Tags:    

Similar News