ஒமிக்ரான் பாதிப்பில் தமிழகம் 3வது இடம்: மாநில எல்லைகளில் தொடரும் அலட்சியம்

ஒசூர் மாநில எல்லைகளில் எவ்வித தடுப்பு நடவடிக்கை இன்றி அலட்சியம் காட்டும் அதிகாரிகள்.;

Update: 2021-12-25 04:50 GMT

ஒமிக்ரான் தொற்று 90 நாடுகளுக்கும் அதிகமாக பரவி அச்சுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் மொத்த ஒமிக்ரான் பாதிப்பு 34ஆக அதிகரித்து மகாராஷ்டிரா , டெல்லி மாநிலங்களுக்கு அடுத்து மூன்றாவது இடம் வகித்து வருகிறது. இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று அதிகரிக்கும் சூழலில் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள ஆலோசனை நடத்துகிறது. 

இந்நிலையில், மாநில எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஜூஜூவாடி, கக்கனூர், பூனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கிருமிநாசினி தெளிப்பு, வெப்பநிலை பரிசோதனை, வெளிநாட்டினரின் விபரம் சேகரிப்பு என எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இந்நிலையில், தற்போது கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு  அதிகளவில் கர்நாடக அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மக்கள்   வருகிறார்கள். இதில் பலர் தடுப்பூசி செல்லுத்தி கொள்ளாமலும் வருகிறார்கள்.

எனவே, அரசு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தாவிட்டால், ஒமிக்ரான் பரவல் தமிழகத்திற்குள் மேலும் பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மாநில எல்லையில் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News