Atm கார்டு வாங்கணுமா..? பேங்க் மேனேஜருக்கு எப்படி கடிதம் எழுதணும்? மாதிரி கடிதம் உள்ளே..!
ATM Card Request Letter Format in Tamil -atm கார்டு பெறுவதற்கு வங்கி மேலாராவுக்கு கடிதம் எப்படி எழுதுவது என்பதற்கு மாதிரி கடிதம் தரப்பட்டுள்ளது.;
atm card request letter-Atm கார்டு மாதிரி படம்
ATM Card Request Letter Format in Tamil -Atm கார்ட் பெறுவதற்கு வங்கி மேலாளருக்கு கடிதம் எழுதுவதற்கான மாதிரி கடிதம் இங்கு தரப்பட்டுள்ளது.
அனுப்புனர்
க.மாதவி,
எண். 25, திருமலை நாயக்கர் தெரு,
கோனேரிப்பட்டி,
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம்.
கைபேசி – 987600000
கணக்கு எண். 567123894
பெறுநர்
கிளை மேலாளர்,
கரூர் வைஸ்யா வங்கி,
ராசிபுரம் கிளை,
நாமக்கல் மாவட்டம்.
பொருள் : புதிய ஏடிஎம் கார்டு வழங்குவது சார்பு
மதிப்பிற்குரிய ஐயா,
நான் நமது வங்கிக்கிளையின் வாடிக்கையாளர். எனது SB கணக்கு எண் : 567123894 ஆகும். எனது நிதி நடவடிக்கைகளுக்கு ATM கார்டு இருந்தால் பணம் எடுப்பதில் வசதியாக இருக்கும். ஆகவே எனது சேமிப்புக் கணக்கிற்கு புதிய ATM கார்டு வழங்கமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாள்: 15.07.2022
இடம்: ராசிபுரம்
தங்கள் உண்மையுள்ள,
க.மாதவி
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2