ATM கார்டு தொலைந்தால் என்ன செய்யணும்..? வாங்க பார்க்கலாம்..!

ATM Card Missing Letter Format in Tamil-ஏடிஎம் கார்டு தொலைந்தால் என்ன செய்யவேண்டும் என்று இங்கு வழிகாட்டப்பட்டுள்ளது.

Update: 2022-07-12 07:45 GMT

atm card missing letter format in tamil-ஏடிஎம் அட்டை தொலைந்தால் என்ன செய்யவேண்டும் என்பதற்கான மாதிரி கடிதம்.

ATM Card Missing Letter Format in Tamil-ATM Card தொலைந்துவிட்டால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பம் வேண்டாம். உங்களை வழிகாட்ட இதோ நாங்கள் இருக்கிறோம். ஏடிம் அட்டை தொலைந்துவிட்டது குறித்து வங்கிக்கு கடிதம் எழுதி தகவலை தெரிவித்து புதிய ஏடிம் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான மாதிரி கடிதம் (Letter) எப்படி எழுதுவது என்று இங்கு தரப்பட்டுள்ளது.

இன்று வங்கிக்கணக்கு இல்லாதவர்கள் கிடையாது. அதேபோல எல்லா வாடிக்கையாளர்களும் ஏடிஎம் கார்டும் வைத்திருப்பார்கள். ATM Card-ஐ Debit Card (டெபிட் கார்ட்)என்றும் சொல்லாம். இந்த அட்டையே விரைவாக பணம் எடுக்க உதவுகிறது. வங்கிக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்.

ஆனால், சில நேரங்களில் தவறுதலாக ஏடிஎம் கார்டை தொலைத்து விடுவோம். அப்படி ATM Card காணாமல் போனால் அது பிறர் எடுத்து வங்கிக்கணக்கில் பண இழப்பை ஏற்படுத்தலாம். ஏனெனில் அந்த ATM அட்டையின் PIN Number தெரிந்தால், யார் வேண்டுமானாலும் அந்த வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுக்கலாம். எனவே ATM Card -ஐ பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.

ATM Card தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்?

சரி ATM அட்டை தொலைந்துபோனால் அடுத்த என்ன செய்வது என்று பார்ப்போம். ஏடிம் அட்டை தொலைந்து போனால் அதை நன்றாக தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை என்றால், முதலில் ATM Card -ஐ Block செய்ய வேண்டும்.

தற்போது Mobile Banking, Internet Banking போன்ற Online சேவைகளில் ATM Card -ஐ Block செய்வதற்கான வசதி உள்ளது. மேலும் இதற்காக இலவச அழைப்பு எண்களும் உள்ளன. இவற்றில் ஏதாவது ஒரு வழியில் உங்களின் Debit கார்டை Block செய்துவிடலாம். இவ்வாறு Block செய்துவிட்டால் வங்கிக் கணக்கில் இருந்து யாரும் பணத்தை எடுக்க முடியாது.

வங்கி அருகில் இருந்தால் உடனே வங்கிக்கிளைக்கு சென்றும் ஏடிம் கார்டை Block செய்யலாம். அவ்வாறு நேரடியாக வங்கிக்கு செல்லும்போது அதை Block செய்துவிட்டு, புதிய ATM Card க்கும் விண்ணப்பம் செய்யலாம்.

ATM Card Missing Letter Format in Tamil- நீங்கள் வங்கிக்கிளைக்கு செல்வதாக இருந்தால் அதற்கானகடிதத்தை எப்படி எழுதுவது என்று பார்ப்போம். அதற்கான மாதிரி கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.

அனுப்புனர்

M.விசயன்,

3/88, தெற்குபுறம்,

ராசிபுரம்,

நாமக்கல்.


பெறுநர்

கிளை மேலாளர்,

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா,

ராசிபுரம்.

பொருள்: ஏடிம் அட்டை தொலைந்த காரணத்தினால் அதை பிளாக் செய்து புதிய ஏடிஎம் கார்டு வழங்க விண்ணப்பம்.

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம். நான் நமது வங்கியின் வாடிக்கையாளர். என் பெயர் M.விசயன். எனது வங்கிக்கணக்கு எண் : 32085669865 ஆகும்.

தவிர்க்கமுடியாத சூழலில் எனது ATM அட்டையை தொலைத்துவிட்டேன். அதை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே ATM கார்டு தொலைந்து போன தகவலை உங்களின் கவனத்திற்கு கொண்டு வர இந்த கடிதத்தை எழுதுறேன். ஆகவே அந்த ஏடிஎம் -ஐ Block செய்து விடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் எனக்கு புதிய ATM அட்டை வழங்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

Bank Account Number: 32085669865

Mobile Number: 8725XXXX 87


நன்றி,

இடம்: நாமக்கல்

தேதி: 18/07/2022                                                                                                                                                                                                 


 இவண்,

M.விசயன்



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News