அரியலூர் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பட்டா திருத்த சிறப்பு முகாம்

அரியலூர் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தீர்வு காண சிறப்பு முகாம்.;

Update: 2022-03-24 06:36 GMT

பைல் படம்.

இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண பட்டா திருத்த சிறப்பு முகாம் மாவட்டத்தின் குறிப்பிட்ட கிராமங்களில் 25.03.2022 (வெள்ளிக்கிழமை) அன்று நடக்கவுள்ளது. அரியலூர் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும், விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கென துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்கள் தலைமையில் வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. முகாமில் பெறப்படும் சிறு கணினி திருத்தம் சார்ந்த மனுக்களுக்கு அன்றைய தினமே தீர்வு காணப்படும்.

அரியலூர் வட்டத்தில் புதுப்பாளையம், சிறுவளுர், கோவில் எசணை (மே), கோவில் எசணை (கி), தூத்தூர், இலந்தகூடம் மற்றும் பார்ப்பனச்சேரி ஆகிய ஏழு கிராமங்களுக்கும் அந்தந்த கிராமத்தின் கிராம சேவை மையக் கட்டிடத்திலும் உடையார்பாளையம் வட்டத்தில் தா.பழுர், ஜெயங்கொண்டம், கோடங்குடி (வ), குண்டவெளி (கி) மற்றும் குண்டவெளி (மே) ஆகிய ஐந்து கிராமங்களுக்கும் அந்தந்த கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் அலுவலத்திலும் சிறப்பு முகாம் நடக்கவுள்ளது.

மேற்படி இந்த சிறப்பு முகாமில் சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு பொதுமக்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் மனுக்கள் அளித்து பயன் அடையுமாறு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News