அலுவலகத்தை திறந்து மனுக்களை பெற்றுக் கொண்டார் எம்எல்ஏ சின்னப்பா
அலுவலகத்தை அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா திறந்துவைத்து மனுக்களைப் பெற்றார்.;
அரியலூர் எம்எல்ஏ அலுவலகம் பேருந்துநிலையம் அருகே மார்க்கெட் தெருவில் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்காக பூட்டப்பட்டிருந்த எம்எல்ஏ அலுவலகம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து பொலிவுபெற்ற எம்எல்ஏ அலுவலகத்தை அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா இன்று திறந்துவைத்தார். பின்பு தனது அலுவலக பணிகளை தொடங்கிய எம்எல்ஏ சின்னப்பா, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தன்னால் முடிந்தஅளவிற்கு பொதுமக்களின் குறைகளை தீர்த்துவைப்பதாக உறுதியளித்தார். நிகழ்ச்சியில் முன்னால் எம்எல்ஏ பாளை.அமரமூர்த்தி, காங்கிரஸ் மாவட்டத்தலைவர் சங்கர், மதிமுக நகரச்செயலாளர் மனோகரன், திமுக நகரச்செயலாளர் முருகேசன் மற்றும் திமுக கூட்டணி கட்சி பொருப்பாளர்கள், கட்சி பிரமுகர்கள், திரளான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.