அரியலூர் மாவட்டத்தில் அரசு வேலை வாய்ப்பு: கலெக்டர் விண்ணப்பிக்க அழைப்பு
அரியலூர் மாவட்டத்தில் அரசு பணிகளில் உள்ள வேலை வாய்ப்புகளில் விண்ணப்பம் செய்ய கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.;
அரியலூர் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் உணவு ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க சமூக நலத்துறையின் கீழ்; 'சகி"- ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) செயல்படுகின்றது. அதில் பணிபுரிய கீழ்கண்ட நிலைகளில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் கீழ்கண்ட அலுவலகத்தில் தங்கள் சுயவிவரங்களுடன் 31.12.2021 அன்று மாலை 5.45-க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
பதவி - வழக்குப்பணியாளர் - 1& 2 (Case Worker 1 & 2, பணியிடம் -4, கல்வித்தகுதி - BSW & MSW (Counseling Psychology or Development Management, வயது வரம்பு -21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும், தகுதி -1 வருடத்திற்கு மேலாக குடும்ப நல ஆலோசனையில் முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும். உள்ளுரை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். தொகுப்பு ஊதியம்ரூ.12,000/- மற்றும் சிறப்பு ஊதியம் ரூ.3,000/-
பதவி - பல்நோக்கு உதவியாளர் (Multipurpose Helper), பணியிடம் -1, கல்வித்தகுதி - 8 வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி அல்லது தோல்வி, வயது வரம்பு -21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும், தகுதி -நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராகவும் / சமையல் தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் வேண்டும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும். உள்ளுரை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். தொகுப்பு ஊதியம்ரூ.6,400/-
பதவி - பாதுகாவலர் (Security Guard), பணியிடம் -1, கல்வித்தகுதி - 8 வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி அல்லது தோல்வி, வயது வரம்பு -21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி -நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும். பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும். உள்;ரை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். தொகுப்பு ஊதியம்ரூ.10,000/-
விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை அரியலூர் மாவட்ட இணையதளத்தில் https://ariyalur.nic.in பதிவிறக்கம் செய்து மாவட்ட சமூக நல அலுவலகம், தரைத்தளம் அறை எண்: 20, மாவட்ட ஆட்சியரக வளாகம், அரியலூர்-621704. முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.