தலைவர்கள் சிலைகளுக்கு அதிமுக மாவட்டச் செயலாளர் மாலை அணிவிப்பு
முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், அரியலூரில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் பெரியார் சிலைகளுக்கு மரியாதை செய்தார்.;
அரியலூர் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற அதிமுக உட்கட்சித் தேர்தலில், மீண்டும் மாவட்டச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் பெரியார் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயங்கொண்டம் முன்னாள் எம்எல்ஏ ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், பொருளாளர் அன்பழகன், வடக்கு ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், தெற்கு ஒன்றியச் செயலாளர் பாலு (எ) பாலசுப்பிரமணியன் மற்றும் தாமரைக்குளம் ஊராட்சித் தலைவர் பிரேம்குமார், நிர்வாகிகள் கல்லங்குறிச்சி பாஸ்கர், ஓ.பி.சங்கர் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தாமரை எஸ்.ராஜேந்திரனுக்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.