அரியலூர் மாவட்ட கோவில் திருவிழாக்கள்

உடையார் பாளையம் இன்ப மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் உஞ்சினி கிராமத்தின் மாரியம்மன் கோவில் தேரோட்டம் ஆகியவை நடைபெற்றது

Update: 2023-05-25 13:10 GMT

செந்துறை அருகே உஞ்சினி கிராமத்தின் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் ஒரு ஆண்டு தேர் திருவிழாவும் மற்றொரு ஆண்டு தீமிதி திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் மாரியம்மன் வீதி உலாவும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. பல்வேறு அலங்காரங்களில் மாரியம்மன் நாள் தோறும் பக்தர்களுக்கு அருள் பாளித்து வந்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான 9 ஆம் நாள் தேர்த்திருவிழா காலை தொடங்கியது. முன்னதாக தேர் கட்டும் பணிகள் நிறைவு பெற்றதும் விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் விளைந்த மா, பலா, முந்திரி ஆகியவற்றை தேரில் கட்டி அலங்கரித்தனர். அதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் பெரும்பாலான பெண்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் தேரை இழுத்து சென்றனர்.

தேரோடும் 4 வீதிகளில் தேர் வலம் வந்தது. கடும் வெயில் காரணமாக மதியம் தேர் பாதி வழியில் திருத்தப்பட்டது. பின்னர் மாலை தேர் வடம் பிடிக்கப்பட்டு மீண்டும் கோவில் சன்னதியை வந்தடைந்தது.

இந்த விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் திருவிழாவை கண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.


அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் இன்ப மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் திருச்சி ரோட்டு தெருவில் ஸ்ரீ இன்ப மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 19ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 4 நாட்கள் 6 கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

அதன் பின்னர் மஹாபூர்னாகுதி, மகா தீபாரதனை நடைபெற்று புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க, வாண வேடிக்கை அதிர, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள், ஓம் சக்தி பராசக்தி என்று பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பினர்.


விழா ஏற்பாடுகளை முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் க.வெங்ட்ராமன், தர்மகர்த்தா சூரியநாராயண், நாட்டார்கள் இளங்கோவன், தர்மன், மற்றும் விழா திருப்பணி குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்

Tags:    

Similar News