காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநில பொதுச் செயலாளரானார் நடிகை ஷகிலா.

தமிழக காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்த நடிகை ஷகிலாவுக்கு, மாநில மனித உரிமை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.;

Update: 2021-03-26 01:45 GMT

பிரபல மலையாள நடிகை ஷகிலா. இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் 110-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தொடக்க காலத்தில் ஆபாச படங்களில் நடித்து பெயர் பெற்றவர் இவர், தற்போது நகைச்சுவை மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

அத்துடன், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ஷகீலா, தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்துள்ளார். இதையடுத்து அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.





Tags:    

Similar News