வீட்டில் நாய் வளர்ப்பவர்களா நீங்கள்.. அப்ப இந்த செய்தி உங்களுக்குத்தான்

தடுப்பூசி போடப்பட்ட நாயின் எச்சிலிலும் பத்து சதவீதம் வரை ரேபிஸ் கிருமிகள் இருக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-12-01 03:00 GMT

பைல் படம்.

நாய்க்கடியால் வரும் ரேபிஸ் நோய்க்கு சிகிச்சை கிடையாது. பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் மோசமான சூழலில் மரணத்தை தழுவ வேண்டியது வரும். இப்படி பல மரணங்கள் நடந்திருந்தாலும், ரேபிஸ் நோய்க்கு இதுவரை சிகிச்சை என்பதே கிடையாது என்பது மட்டும் உண்மை. ஆனால் ரேபிஸ் நோய் தாக்காமல் இருக்க நாய்க்கு ரேபிஸ் கிருமிகள் வராமல் தடுக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அப்படி தடுப்பூசி போடப்பட்ட நாய்களின் மூலம் ரேபிஸ் நோய் பரவாது என இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் தடுப்பூசி போடப்பட்ட நாயின் எச்சிலில் ரேபிஸ் வைரஸ்கள் குறைந்த அளவு இருக்கும். இதன் மூலம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என கால்நடை டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

இது பற்றி தஞ்சை மருத்துவர் சுந்தர்ராஜன் சொக்கலிங்கம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: இதுவரை இந்த மருத்துவ பணியில் எவ்வளவோ மனித இறப்புகளை நேராக நான் பார்த்ததுண்டு. ஆனால் சில நாட்களுக்கு முன் பணியின் போது கண்கூடாக கண்ட ஒரு மரணம் என்னை இரண்டு நாட்களாக தூங்க விடவில்லை.

அந்த நோயாளி அவர்கள் வீட்டில் வளர்க்கபட்ட ஒரு அல்ஷேசன் வகை நாயால் உணவு தரும் போது எதேட்சையாக கடிக்கப் பட்டிருக்கிறார். 40 வயது பெண் ஆகிய அந்த நோயாளி மூன்று பெண்களுக்கு தாய். அவரது கணவர் தஞ்சை வருமான வரித்துறையில் வேலை பார்க்கிறவர்.

அந்த நாய்க்கு எல்லா வகை தடுப்பூசிகளும் முறையாக போடப்பட்டிருக்கிறது. 40 நாட்களுக்கு முன்பு அவர் அந்த வளர்த்த நாயால் எதேச்சையாக கடிக்கப்பட்டு ,அவருக்கு தடுப்பூசியும் முறையாக போடப்பட்டிருக்கிறது.

இருப்பினும் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் உள் நோயாளியாக கடந்த செவ்வாய் அன்று ரேபிஸ் அறிகுறிகளோடு அவர் அனுமதிக்கபட்டு எனது பணியின் போது மரணமடைந்தார். தனிவார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு அவருக்கு எல்லா சிகிச்சைகளும் கொடுக்கபட்டிருந்தன.

அவரது குழந்தைகள், கணவர் முன்னிலையில் முழு சுய நினைவோடு இருந்த அவர், திடீரென இறந்த அந்த இரவும், அந்த குடும்பமே கதறிய சோகமும் என்னை பெரிதும் பாதித்தது. அதுவும் இறப்பிற்கு பின் அவரது உடல் நகராட்சியிடம் ஒப்படைக்க பட்ட போது அவரது மூன்று மகள்களும் கதறி அழுதது இன்றும் என் கண்களில். வாழ்க்கையில் இந்த மாதிரியான இறப்புகள் என்றும், யாருக்கும் நிகழக் கூடாது.

எனது ஒரத்தநாடு கால்நடைமருத்துவ கல்லூரி பேராசிரிய நண்பரிடம் இது குறித்து பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன தகவல் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"எல்லா நாய்களின் உமிழ்நீரிலும் ரேபிஸ் உண்டாக்கும் வைரஸ் 10 சதவீதம் கட்டாயம் இருக்கும், அவைகளுக்கு முழு தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் " என்று உறுதியாக கூறினார். இந்த தகவல் என்னை முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

என் பிரிய நண்பர்களே இனிமேலாவது வீட்டில் வளர்க்கும் கவனமாக இருங்கள் அல்லது நாய் வளர்க்காதீர்கள். எவ்வளவோ சிகிச்சைகள் வந்து விட்டாலும் ரேபீஸ் வந்து விட்டால் மரணம் நிச்சயம் . (mortality is 99.9percentage)

என்னை பாதித்த இந்த மரணத்தின் தாக்கம் மறைய நாட்கள் நிறைய ஆகும் போலிருக்கிறது. முடிந்த வரை நாய்கள் வளர்ப்பதை தவிர்க்கவும். இதை எப்போதும் நான் சொல்லி வருகிறேன். நாயின் வாயோடு வாய் வைத்துக் கொஞ்சுபவர்களின் முட்டாள்தனமான செயலைக் காணும்போது மனம் பதறுகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

Similar News