சுகாதார ஆய்வாளர் பணிக்கு சேரணுமா? விண்ணப்பம் அனுப்புங்கள்
தமிழகத்தில் இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 1,066 இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாமென மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
மொத்த பணியிடங்கள் : 1,066
கல்வித்தகுதி: 10ம் வகுப்பில் தமிழ் மொழி பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2 வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல் அல்லது விலங்கியல் பாடத்தில் தேர்ச்சி பெற்று, 2 ஆண்டுகள் சுகாதார பணியாளர் அல்லது சுகாதார ஆய்வாளர் டிப்ளமோ படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், எஸ்.சி.,/எஸ்.டி.,/பி.சி.,/எம்.பி.சி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பொது பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32 வயதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு 42 வயது, முன்னாள் ராணுவத்தினருக்கு 50 வயது வரை தளர்வு அளிக்கப்படுகிறது.
சம்பளம் : ரூ.19,500 - ரூ.62,000 வரை
விண்ணப்ப கட்டணம் : எஸ்.சி.,/ எஸ்.டி/ மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.300 கட்டணம், மற்றவர்களுக்கு ரூ.600 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.07.2023
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் : www.mrb.tn.gov.in
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது மொபைல் எண், இமெயில் முகவரியை அளிப்பது கட்டாயம். மேலும் கல்வி சான்றிதழ் நகல்களை சமர்ப்பிக்க வேண்டுமென்பதால், ஸ்கேன் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தேர்வு தொடர்பாக அனைத்து தகவல்களும் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
கூடுதல் விவரங்களை www.mrb.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.