20 வருட 'அரியர்' தேர்வுக்கு அண்ணா பல்கலை அளிக்கும் 'அரிய' வாய்ப்பு

அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், 20 ஆண்டுகள் முன்பு படித்து, 'அரியர்' வைத்துள்ளவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு;

Update: 2021-09-25 07:38 GMT

அண்ணா பல்கலையின் இணைப்பு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 20 ஆண்டுகள் முன் வரை படித்து, 'அரியர்' பாடம் உள்ளவர்களுக்கு பட்டப் படிப்பை முடிக்க, சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளின் மாணவர்களில், குறிப்பிட்ட கால வரையறைக்குள் தங்களுக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, பட்டம் பெறாதவர்களுக்கு, சிறப்பு சலுகையாக தேர்வில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இதன்படி, கடந்த 2001-2002ம் கல்வி ஆண்டில், மூன்றாவது செமஸ்டர் தேர்வு படித்த மாணவர்கள் முதல், தற்போது வரை படித்தவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படுகிறது அவர்கள், அண்ணா பல்கலையின் நவம்பர் -டிசம்பர் தேர்வில் பங்கேற்கலாம். இதற்கு சிறப்பு கட்டணமாக மாணவர்கள் 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.அத்துடன், வழக்கமான தேர்வு கட்டணமும் செலுத்த வேண்டும். இந்த சலுகை திட்டத்தில் தேர்வு எழுத விரும்புவோர், இன்று முதல் அக்., 4க்குள், அண்ணா பல்கலை தேர்வு பிரிவு இணையதள இணைப்பில் தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News