Anna Quotes in Tamil-அண்ணா சொன்ன பொன்மொழிகள் அறிவோமா?
அண்ணா என்றால் மூத்த சகோதர உறவை வலியுறுத்தும் ஒரு சொல்லாக இருந்து வந்தது. தமிழ்நாட்டின் வழிகாட்டியாக இருந்த அண்ணாதுரையை 'அண்ணா' என்று அன்போடு அழைத்தனர்.;
Anna Quotes in Tamil
அறிஞர் அண்ணா 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் பட்டு தொழிலுக்கு பெயர் போன காஞ்சி மாநகரத்தில் பிறந்தார். தந்தை நடராசர். தாயார் பங்காரு அம்மாள். ஆரம்ப கல்வியையும், உயர்நிலை படிப்பையும் காஞ்சியிலே படித்தார். பின்னர் பட்டப்படிப்பை சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் படித்தார். சிறுவயதிலே பல்வேறு எழுத்தாளர்களின் அறிவார்ந்த நூல்களை எளிதாக படிக்கும் திறனை அறிஞர் அண்ணா கொண்டிருந்தார். அண்ணாவை அன்போடு சீராட்டி வளர்த்தவர் இராசாமணி அம்மையார் ஆவார்.
Anna Quotes in Tamil
அண்ணாவின் அம்மா பங்காரு அம்மாள் அண்ணாவின் சிறுவயதிலே இறந்துவிட்டமையால் அண்ணாவின் தந்தை நடராசன் இராசாமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இராசாமணி அம்மையார் அவர்கள் அறிஞர் அண்ணாவை 'தொத்தா' என அன்போடு அழைத்தார். அறிஞர் அண்ணா தனது விருப்பப்படியே இருபத்தி ஒன்றாம் வயதில் இராணி அம்மையாரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் குழந்தை பிறக்காத காரணத்தால் தனது சகோதரியின் பேர குழந்தைகளையே தன் குழந்தைகளை போல் வளர்த்தனர் அண்ணாவும் இராணி அம்மையாரும்.
அறிஞர் அண்ணா, சி.என். அண்ணாதுரை, இந்தியாவின் தமிழ்நாட்டின் முக்கிய தலைவர், எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். சமூக நீதி, சுயமரியாதை, மொழிப் பெருமைக்காக வாதிட்ட திராவிட இயக்கத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தார். இக்கட்டுரை, அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை, தமிழ்ச் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு, தமிழக அரசியல் களத்தில் அவர் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது.
Anna Quotes in Tamil
அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
1.போட்டியும் பொறாமையும்
பொய் சிரிப்பும் நிறைந்த
இந்த உலகத்தில் நமது
பாதையில் நாம் நேராக
நடந்து செல்ல நமக்கு
துணையாக இருக்க கூடியது
கல்வி மட்டுமே.
2. பழமை புதுமை என்ற
இரு சக்திகளுக்கும் போர்
நடக்கிறது. எழுத்தாளர்களின்
பேனா முனைகளே அப்போரில்
உபயோகமாகும்
போர்க் கருவிகள்.
3. எவ்வளவு
அலட்சியப்படுத்தப்பட்டாலும்
அவமானங்களுக்கு ஆளாக்கப்பட்டாலும்
எடுத்த காரியத்தை முடித்தே தீருவது
என்ற திடமான கொள்கையும்
விடாமுயற்சியும் இருந்தால்
வெற்றி கிடைத்தே தீரும்.
Anna Quotes in Tamil
4. ஓராயிரம் ஆபத்துக்கள்
ஓயாமல் நம்மை நோக்கி
வந்தாலும். நம் உள்ளம் உண்மை
என்று உணர்ந்ததை உரைக்க
அஞ்சுபவன் கோழை மட்டுமல்ல
நாட்டுத் துரோகி.
5. ஆளப்பிறந்தவன் ஆண்மகன்.
அவன் இஷ்டத்துக்கு ஆடிப்
பிழைக்க வேண்டியவள்
பெண் மகள் இப்படிப் பேசிடும்
பண்பு படைத்தது இந்து மதம்.
இந்த இந்து மதத்தை
நம்பிக் கிடக்கும் நாடு உருப்படாது.
6. நான் எப்போதுமே கடவுளிடம்
உண்மையான நம்பிக்கையுடன்
வாதாடுபவன்.
Anna Quotes in Tamil
7. ஏழையின் சிரிப்பில்
இறைவனை காணலாம்.
8. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
தங்களுக்கு தாங்களே நம்பிக்கை
உள்ளவர்களாக நடந்து கொண்டால்
மட்டும் போதாது,
தேர்ந்தெடுத்த மக்களுக்கும்
நம்பிக்கை உள்ளவர்களாக
நடந்து கொள்ள வேண்டும்.
9. சிறந்த வரலாறுகளைப்
படித்தால் தான் இளம் மனதில்
புது முறுக்கு ஏற்படும்.
Anna Quotes in Tamil
10. நாள், கொள், நட்சத்திரம்,
சகுனம், சாஸ்திரம் அத்தனையும்
மனித முயற்சிக்கு போடப்படுகிற
தடை கற்கள்.
11. தன்னை வென்றவன்
தரணியை வெல்வான்.
12. பகைவர்கள் தாக்கி தாக்கி
தங்கள் பலத்தை இழக்கட்டும்..
நீங்கள் தாங்கி தாங்கி பலத்தை
பெற்றுக்கொள்ளுங்கள்.
13. எவ்வளவு கட்டிடங்கள் கட்டினாலும்,
விஞ்ஞான கூடங்கள் அமைத்தாலும்,
புது பூங்கா அமைத்தாலும்
கல்விச் செல்வம் இல்லாவிடில்
அவை பயன்தராது.
Anna Quotes in Tamil
14. பாடத்திட்டங்களில் பகுத்தறிவைப்
புகுத்தும் தீவிரமான திட்டம்
உருவாக்கப்படாத வரையில்
பகுத்தறிவு வளராது
நம் நிலையும் உயராது.
15. விதியை நம்பி மதியை
பறிகொடுத்து பகுத்தறிவற்ற
மனிதர்களாய் வாழ்வது
மிக மிக தீங்கு.
16. சமூக புரட்சி பணியில்
ஈடுபட்டவர்களுடைய வாழ்க்கை
துன்பமானது தான். ஆனால்
அவர்களது பெயர் வரலாற்றில்
நிலைத்து நிற்கிறது.
Anna Quotes in Tamil
17. வாழ்க்கை ஒரு பாறை,
உங்களிடம் அறிவு என்ற
உளி இருக்கிறது. அதை
அழகான சிற்பமாக
வடித்து ரசியுங்கள்.
18. பாடத்திட்டத்தில் பகுத்தறிவை
புகுத்தினால் தான் மக்களுக்கு
பழமையிடத்திலுள்ள
பாசம் குறையும், மனதில் உள்ள
மாசு நீங்கும், காலத்திற்குத் தக்கது
போல கருத்து வளரும்.
19. நடந்தவை நடந்தவையாக
இருக்கட்டும்.. இனி நடப்பவை
நல்லவையாக இருக்கட்டும்.
Anna Quotes in Tamil
20. புகழ் தான் நம்மை தேடி
வர வேண்டும்… புகழை தேடி
நாம் அலையக் கூடாது.
21. உலகத்தின் பிளவு,
குடும்பத்தில் ஆரம்பிக்கிறது.
22. ஒரு சிறந்த புத்தகத்தை போல
சிறந்த தோழனும் இல்லை.
நெருக்கமான உறவினனும்
எனக்கு வேறு இல்லை.