தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் -முதல்வர் ஸ்டாலின்

"தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்' - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Update: 2022-03-22 17:30 GMT
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அ.தி.மு.க உறுப்பினர் தேர்தல் அறிக்கையிலே சொன்னீர்களே, ஏன் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

நீங்கள் தொடர்ந்து இரண்டு முறை, அதாவது 10 வருடங்கள் ஆட்சியில் இருந்தீர்கள். நீங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னதையெல்லாம் முழுமையாக செய்து முடித்து விட்டீர்களா? அப்படிச் செய்து முடித்திருந்தால், சொல்லுங்கள். பல வாக்குறுதிகளை நீங்கள் அந்த 10 வருடங்களில் நிறைவேற்றவேயில்லை. அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அது மக்களுக்கும் நன்றாகத் தெரியும்.

நான் இப்போது சொல்கிறேன். நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கக்கூடிய வாக்குறுதிகளை, உறுதிமொழிகளை, அதிலும் குறிப்பாக இந்த 10 மாதங்களில், நாங்கள் செய்திருக்கக்கூடிய சாதனைகளைப் போல் எந்த ஆட்சியிலும் செய்யவில்லை என்பதை நான் உறுதியோடு சொல்ல முடியும். எனவே, விரைவிலே, நீங்கள் என்னென்ன வாக்குறுதிகளைக் கேட்டிருக்கிறீர்களோ, அவற்றையெல்லாம் பட்ஜெட்டிலும் சொல்லியிருக்கிறோம். எனவே, நிச்சயமாக, உறுதியாக, படிப்படியாக அவை நிறைவேற்றப்படும். அதுதான் எங்களுடைய இலட்சியம், அதுதான் எங்களுடைய கொள்கை என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News