முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாய சங்க நிர்வாகிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து விவசாய சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.;

Update: 2021-09-01 04:22 GMT

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்காகவும், தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண்மை துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்தமைக்காகவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து விவசாய சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலக் குழு பொதுச் செயலாளர் பெ.சண்முகம், மாநில செயலாளர் சாமிநடராஜன், தேசியகுழு உறுப்பினர் ஆர்.முல்லை, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் பசுமை வளவன் ஆகியோர் நேரில் சந்தித்து விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Tags:    

Similar News