நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையிலிருந்து அமெரிக்கா பயணம்
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையிலிருந்து அமெரிக்கா பயணமானார்.;
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையிலிருந்து அமெரிக்கா பயணம்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது அண்ணாத்த' திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அண்ணாத்த படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டு முழுமையாக குணமானார். அதற்குப் பின்பே மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தொடர்ச்சியாகப் படங்கள் நடித்து வந்தாலும் அவ்வப்போது அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் சென்று வருவார்.
தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டுக்கு சிகிச்சைக்குச் செல்லாமல் இருந்தார். தற்போது அமெரிக்காவில் பாதிப்பு குறைந்ததால் அவர்அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்ய திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் வெளிநாடு செல்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார்.