சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக பரவும் நடிகர் அஜித்குமார் குடும்ப படம்
சமூக வலைத்தளங்களில் நடிகர் அஜித்குமார் குடும்ப படம்வைரல் ஆக பரவி வருகிறது.;
தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடித்திருப்பவர் நடிகர் அஜித்குமார்.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக பரிணமித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். அஜித்குமார் -ஷாலினி தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. தான் நடித்த ஒரு படத்தில் தூக்குதுரை என்ற கதாபாத்திரத்தில் வரும் கெட்டப்பில் அஜித் குமார் இருப்பது தல ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.