சரித்திர பின்னணி கோயில்கள் பற்றி அறிய...
கும்பகோணம் பகுதியில் உள்ள கோயில்களை குழப்பம் இன்றி சுற்றி பார்க்க உதவும் டிரைவரை பற்றி பார்க்கலாம்.;
சரித்திர பின்னணியில் உள்ள கோயில்கள் பற்றி அறிய கும்பகோணத்தில் கோயில் விசிட் போனால், செந்தில் குமார் டிரைவரை கூப்பிட மறந்துடாதீங்க.
இவர் வைத்திருப்பது cab தான். இது ஒரு Private vehicle. Not any Travels. டிரைவரோட Qualification just MA MPhil Phd… அவ்ளோ தான்.. அதுவும் சிற்ப சாஸ்திரத்தில் டாக்டரேட் வாங்கியவர். ஒரு காலேஜில் ஆசிரியர் பணியில் நிரந்தரம் செய்ய வெறும் 20 லட்சம் ரூபாய் மட்டும் கேட்டாங்களாம்.
வெறுத்துப்போய், தானே ஒரு கார் வாங்கி இதுபோல கோயில் சுற்றுலாகாரர்களுக்காக வண்டி ஓட்டறாரு.. வெறும் reference கொடுங்க போதும் என்கிறார். சரித்திரப் பின்னணியில் கோயில்கள் பற்றி அழகா சொல்றாரு..
நம்ம தமிழ்நாட்டு அரசைப்பத்தி பேச ஆரம்பிச்சா மட்டும் பொங்கிடறாரு...தமிழ்நாட்டுல படிச்சவனுக்கே மரியாதை கிடையாது. யாருக்காவது இங்கே சுத்திப் பாக்கணும்னா, இவர் வண்டில போங்க..
நல்ல வண்டி டிரைவர் உடன் வேண்டும் என்றால் இவர் Best - நல்லா இருந்து உங்களுக்கு OK என்றால் Reference மட்டும் கொடுங்கள் - மேலே இவர் Visiting Card