உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், மத்திய அமைச்சர்பியூஸ் கோயல் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான உலக முதலீட்டாளர் மாநாடு தொடங்கியது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிறது. இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பல்வேறு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வரத்தக மையத்தில் இன்று தமிழ்த்தாய் வாழ்த்துடன் உலக முதலீட்டாளர்கள் மாநாடு துவங்கியது. தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்புரை வழங்கினார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கிவைத்து உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசை வழங்கினார். இந்த மாநாட்டில் தொழில்கள் அடிப்படையிலான பல்வேறு தனித்தனி அமர்வுகள் நடத்தப்பட உள்ளன. ஜவுளி, காலணி தொழில்கள், மின்சார வாகனங்கள் மற்றும் வேளாண் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு அமர்வுகள் 2 நாட்களும் நடைபெறுகிறது.
மாநாட்டின் தொடக்க விழாவான இன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒளிபரப்ப மாவட்ட ஆட்சியர்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டின் 2ம் நாளான நாளை பல்வேறு நாடுகளின் தொழில்நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளன.
ஏற்கனவே உலகப் புகழ் பெற்ற அடிடாஸ் நிறுவனத்துடன் புரிந்து ஒப்பந்தம் முடிவாகியுள்ளது அறிவிப்பு வெளியானது. அதன் விளைவாக அடிடாஸ் நிறுவனத்தின் “திறன் மற்றும் மேம்பாட்டு மையம்” சென்னையில் அமைக்கப்பட உள்ளது. சீனாவிற்கு பிறகு அதன் அடிடாஸ் நிறுவனம் ஆசியாவிலேயே சென்னையில்தான் அமைய உள்ளது.
இந்த நிலையில் 5.50லட்சம் அளவுக்கு முதலீகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டின் மூலம் 1ட்ரில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டின் தொடக்கமாக 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் நிறுவனங்கள்:
- ஹூண்டாய் நிறுவனம் - ரூ. 6,000 கோடி முதலீடு; காஞ்சிபுரத்தில் - ரூ.1,100 கோடி முதலீடு
- குவால்காம் - ரூ.177 கோடி முதலீடு - 1,600 பேருக்கு வேலைவாய்ப்பு
- அமெரிக்க சோலார் தயாரிப்பு நிறுவனம் ரூ. 2,500 கோடி முதலீடு - முதற்கட்டமாக 350 பேருக்கு வேலைவாய்ப்பு; காஞ்சிபுரத்தில் ரூ.5,600 கோடி முதலீடு
- கோத்ரேஜ் - ரூ. 515 கோடி முதலீடு - 446 பேருக்கு வேலைவாய்ப்பு - செங்கல்பட்டு
- டாடா எலெக்ட்ரானிக்ஸ் ரூ.12,082 கோடி - 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு - கிருஷ்ணகிரி
- பெகாட்ரான் - ரூ. 1,000 கோடி முதலீடு- 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு
- ஜேஎஸ்டபுள்யூ JSW -12,000 கோடி - தூத்துக்குடி
- டிவிஎஸ் குழுமம் - ரூ.5,000 கோடி முதலீடு - 500 பேருக்கு வேலைவாய்ப்பு
- மிட்சுபிஷி - ரூ.200 கோடி - கும்மிடிப்பூண்டி
- AP Moller Maersk
- Vinfast ரூ.16,000 கோடி முதலீடு - தூத்துகுடி
இந்த மாநாட்டில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிநாடுகளுக்கு போகும் போது கோட் சூட் அணிவது வழக்கம், எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளாதால் இன்று கோட் சூட் அணிந்துள்ளேன். சென்னையில் இன்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது.
அதே போல இந்த மாநாட்டின் மூலம் முதலீடுகளும் மழையாக பெய்யும் என நம்புகிறேன். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த மத்திய அமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். பல்வேறு வகையில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அமெரிக்கா, சிங்கபூர் உள்ளிட்ட 9 நாடுகள் பங்குதாரர்களாக இணைந்துள்ளன.
பொருளாதார வளர்ச்சியில் அதிவிரைவு வேகத்தில் தமிழ்நாடு பயணிக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றன. நாளைய தொழிற் மாற்றங்களை கணித்து வைத்துள்ளோம். பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பெரியார், அண்ணா, கருணாநிதியை தொடர்ந்து சமூக , பொருளாதார அரசியல் முன்னேற்றத்தில் பெண்களை முன்நிறுத்தி வருகிறோம்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் 200க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. தமிழ்நாட்டில் முதலீடு செய்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அனைவரையும் தமிழக அரசு மதிக்கும். இவ்வாறு அவர் உரையாற்றினார்.