தமிழகத்தில் 1- ம்தேதி கன மழை பெய்ய உள்ள 11 மாவட்டங்கள்
தமிழகத்தில் பிப்ரவரி 1- ம்தேதி கன மழை பெய்ய உள்ள 11 மாவட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.;
தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெய்த அளவிற்கு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு செய்யவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் பெருத்த ஏமாற்றத்தில் உள்ளனர். வடகிழக்கு பருவமழையின் இறுதி கட்டமான தற்போது தமிழக முழுவதும் மழை இல்லை. ஆனால் இரவில் தொடங்கி காலை வரை பனிப்பொழிவு மிக அதிகமாக உள்ளது.
பொதுவாக பனிப்பொழிவு அதிகரித்து விட்டால் மழையின் அளவு குறைந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை. அந்த வகையில் தற்போது மழையும் குறைந்துவிட்டது. வெயில் தலை காட்டத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் வங்க கடலின் தென்மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது .இந்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி (புயல் சின்னம்) உள்ளது.
புயல் சின்னம் காரணமாக சென்னை வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை ஒரு பக்கம் கவலையை ஏற்படுத்தினாலும் மழையாவது பொய்யாதா என்று எதிர்பார்ப்பு விவசாயிகளிடமும் பொது மக்களிடமும் ஏற்பட்டு உள்ளது.