சுனாமி தாக்குதலின் 16-ம் ஆண்டு நினைவு தினம் : பொதுமக்கள் அஞ்சலி

Update: 2020-12-26 04:39 GMT

சுனாமி தாக்குதலின் 16-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி தமிழகத்தில் சென்னை, கடலூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி ஆழிப்பேரலை தாக்கியது.இந்த சுனாமி பேரலையால் தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த துயர நிகழ்வு நடந்து இன்றோடு 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதை ஒட்டி இன்று தமிழகம் முழுவதும் 16-ம் ஆண்டு சுனாமி நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி கடலூர் துறைமுகத்தில் இன்று மீனவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள மீனவர்கள் ஊர்வலமாகச் சென்று கடலில் பால் ஊற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதே போல் கன்னியாகுமரியில் உள்ள மணக்குடி மீனவர் கிராமத்தில் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு திருப்பலி நடைபெற்றது. 

Tags:    

Similar News