கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு...
கருணாநிதி பிறந்த நாளன்று.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் படிப்படியாக அதிகரித்து வருகிறது.மேலும் பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பல்வேறு மாவட்டங்களில் நடமாடும் காய்கறிக்கடைகள் செயல்படுகின்றன.இந்த நிலையில், மக்கள் கூடுவதை தடுக்கவும், அத்தியாவசிய பொருட்கள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்யவும் ரேஷன் கடைகள் மூலம் மளிகைப் பொருள்களை வழங்க அரசு முடிவு செய்து கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் 2,11,12,798 குடும்பங்கள் பயன்பெறும். வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாளன்று வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது