திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் : அமைச்சர் சிவி சண்முகம் வெளியீடு
அமைச்சர் சிவி சண்முகம்;
விழுப்புரத்தில் திமுக கட்சி அமைச்சர்கள் தலைவர்கள் அனைவரும் மீதும் மீது ஊழல் புகார்களை அமைச்சர் சி வி சண்முகம் கூறினார்.
விழுப்புரத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கூறியதாவது:திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று ஆளுநரை சந்தித்து ஒரு உத்தேச புகார்ப் பட்டியலை அதிமுக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது கொடுத்துள்ளார்.இது ஒன்றும் புதிதல்ல, அதிமுக ஆட்சி அமைத்ததிலிருந்து, இதுபோன்ற புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
யாராே எழுதி கொடுத்த வசனத்தை ஸ்டாலின் பேசுகிறார். மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் சுமங்கலி கேபிளுக்கு பலகோடி ரூபாய் தொலைத்தொடர்புகள் இருந்து ஊழல் செய்தது அவர்கள் தான் என்று ஸ்டாலினுக்கு தெரியாதா என்றும் அவர் விமர்சனம் செய்தார் மேலும் கார் வாங்கியதில் உதயநிதி ஸ்டாலின் ஊழல் செய்தது ஸ்டாலினுக்கு தெரியாதா என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து வழக்குகளை வந்தால் சந்திக்க அதிமுக தயார் நிலையில் உள்ளதாகவும் திமுக தற்பொழுது வழக்கை சந்திக்க தெரியாமல் பொய் புகார்களை அதிமுக மீது குற்றச்சாட்டுக்களை வைத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.