கமல்ஹாசன் ஒருபோதும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறுகையில்,மின்சார வாரியத்திலும் காலியாக இருக்கின்ற 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கேங்மேன் பணியிடங்களுக்கு தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் தற்போது அதனை நிரப்பப்பட முடியவில்லை. எனவே தொழிற்சங்கங்கள் வழக்கை திரும்ப பெற வேண்டும்.
50 சதவீதத்துக்கு மேல் மின்துறையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே மின்வாரியத்தில் பணிகள் தொய்வில்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காகவே 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் அவுட்சோர்சிங் என்ற முறையில் பணியாளர்களை நியமிக்கப்பட உள்ளனர். எந்த சூழ்நிலையிலும் தமிழக மின்சார வாரியம் தனியார் மயமாகாது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். நடிகரும் மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் தொடர்ந்து எம்.ஜி.ஆர் குறித்து பேசிவருவதால் அவர், ஒருபோதும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது எனவும் தெரிவித்தார்.