சாதிக்கத் தூண்டுபவர்களை பத்ம விருதுகளுக்காக நீங்கள் பரிந்துரைக்கலாம் -பிரதமர் மோடி
கடந்த 1954-ம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. கடந்த 1954-ம் ஆண்டு முதல் குடியரசு தினத்தன்று இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பத்ம விருதுகளுக்காக சாதிக்க உத்வேகம் அளிக்கும் நபர்களை மக்களே பரிந்துரைக்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, களப்பணிகளில் சிறப்பான செயல்களை செய்யும் பலர் இந்தியாவில் உள்ளனர். ஆனால், அவர்கள் குறித்து நாம் அறிவதில்லை.
உங்களுக்கு இப்படிப்பட்ட சாதிக்கத் தூண்டும் நபர்களை தெரியுமா? அப்படி தெரிந்திருந்தால், அவர்களை மக்கள் பத்ம விருதுகளுக்காக நீங்கள் பரிந்துரைக்கலாம். செப்டம்பர் 15 ஆம் தேதி வரை பத்ம விருதுகளுக்காகப் பரிந்துரை செய்யலாம் என தெரிவித்துள்ளார்.