மக்களின் ஆசியால் மீண்டும் பா.ஜ. ஆட்சி: நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு

மக்களின் ஆசியால் மீண்டும் பா.ஜ. ஆட்சி அமையும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசினார்.

Update: 2023-08-10 13:40 GMT

நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பதில் அளித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் இன்று பேசினார்.

மக்களின் ஆசியால் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமையும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசினார்.

மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் பிரச்சனை எழுப்பி வருகிறார்கள். இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் முழுமையாக நடைபெற முடியாமல் தவித்து வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் பா.ஜ.க. அரசு மீது நம்பிக்கை இல்லா  தீர்மானத்தை காங்கிரஸ் எம்.பி. ஒருவர் கொண்டு வந்தார். அதற்கு நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவும் அனுமதி வழங்கினார்.

அதன்படி நம்பிக்கையில்லா தீர்மானம் கடந்த எட்டாம் தேதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தின் மீது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. மணிப்பூர் கலவரத்தில் பாரத மாதாவை பா.ஜ.க. அரசு கொலை செய்து விட்டது என குற்றம் சாட்டி ஆவேசமாக பேசினார்.அவரது ஆவேச பேச்சுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்தார்.

இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாக மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் இது எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்தினார்கள்.


இந்த விவாதத்திற்கு பதில் அளித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் ஏழை மகன் பிரதமராக இருப்பது எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. ஏழை மகன் பிரதமராக இருக்க கூடாதா? என உருக்கமாக பேசினார். மேலும் மணிப்பூர் விவாகரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனர். அவர்களுக்கு தேச நலனை விட தங்களது சொந்த நலனில் தான் அக்கறை அதிகம். நாட்டு மக்களுக்கு பா.ஜ.க அரசு மீது நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. மக்களின் ஆசியால் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமையும் என்றார்.

மேலும் இலங்கை அனுமனால் அழிக்கப்படவில்லை. ராவணின் ஆணவத்தால் தான் அழிந்தது. அதுபோன்று தான் காங்கிரஸ் கட்சி ஆணவத்தால் தனனை அழித்துக்கொண்டிருக்கிறது என்று ராமாயண காவியத்தை சுட்டிக்காட்டியும் பேசினார்.

Tags:    

Similar News