கனிமொழியின் கணவர் அரவிந்தனுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை மாற்றம்
கனிமொழியின் கணவர் அரவிந்தன் சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்து சென்னை அப்பலோ மருத்துவமனைக்கு மாற்றம்செய்யப்பட்டுள்ளார்.;
கனிமொழியின் கணவர் அரவிந்தன் சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்து சென்னை அப்பலோ மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆகவும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகவும் இருப்பவர் கனிமொழி.இவர் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் ஆவார்.
கனிமொழியின் கணவர் அரவிந்தன். இவர் நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு அளிக்கப்பட்ட தீவிர தொடர் சிகிச்சையின் காரணமாக உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அரவிந்தனை சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் அழைத்து வந்து சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். சிங்கப்பூர் மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டாலும் கூட அரவிந்தனை உடனிருந்து கவனித்துக் கொள்வதற்காக அவரை சென்னை அப்பலோ மருத்துவமனைக்கு மாற்றம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
கனிமொழியின் கணவர் அரவிந்தன் சென்னை அப்பலோவில் சிகிச்சை பெற்று வரும் தகவலை அறிந்து நேரடியாக புறப்பட்டு சென்று கனிமொழி மருத்துவரிடம் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டு அறிந்து உள்ளார். முதலமைச்சர் மு. க. ஸ்டாலினும் தங்கை கனிமொழிக்கு தைரியம் அளித்துள்ளார். இதனிடையே கனிமொழி ஆதரவாளர்கள் பலரும் அப்பலோ மருத்துவமனைக்கு படையெடுத்து சென்று அரவிந்தனின் உடல் நலம் பற்றி விசாரித்து வருகிறார்கள். கனிமொழியின் கணவர் அரவிந்தன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் இன்னும் ஓரிரு நாட்கள் சிகிச்சை பெறுவார் என்றும் அதன் பிறகு அரவிந்தன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் கூறப்படுகிறது.