தமிழ்நாட்டின் படையைத் திரட்டி மேகதாது அணையை உடைத்தெறிவோம் இயக்குனர் கௌதமன்
தமிழ்நாட்டின் படையைத் திரட்டி மேகதாது அணையை உடைத்தெறிவோம் என இயக்குனர் கௌதமன் கரூர் மாவட்டம் வெண்ணமலை பகுதியில் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் படையைத் திரட்டி மேகதாது அணையை உடைத்தெறிவோம் என இயக்குனர் கௌதமன் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் வெண்ணமலை பகுதியில் உள்ள ஐயப்பன் திருக்கோவிலில் நடைபெற்ற 100 தமிழ் பூசாரிகளுக்கு குடமுழுக்கு நடத்தும் மந்திரங்களின் பயிற்சிகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தோழர் மணியரசு, சத்தியபாமா, மூங்கில் அடிகளார் மற்றும் இயக்குனர் கௌதமன் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் கௌதமன்: 2006ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி காலத்தில் சுமார் 207 பேர் தமிழ் மொழியில் மந்திரங்கள் கற்று கோயில் பூசாரிக்கான தேர்ச்சி பெற்றனர். அதில் வெறும் 2 பேர் மட்டுமே, அனைத்து சாதியினரும் பூசாரி ஆகலாம் என்ற கணக்கில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 205 தமிழ் பூசாரிகளுக்கும் உடனடியாக அரசு நிரந்தர பணியில் அமர்த்த வேண்டும் என தமிழக அரசு, முதல்வர் மு.க.ஸ்டாலிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் கௌதமன், கர்நாடகா மாநிலத்தில் ஏற்கனவே பொம்மை போன்ற ஒரு முதலமைச்சர் இருந்தார். ஆனால் தற்போது பொம்மை என்ற பெயரிலேயே முதலமைச்சர் பொறுப்பேற்று உள்ளார். அவர் மேகதாது பகுதியில் அணை கட்டுவது என்பது தமிழருக்கு எதிரான விரோதமான ஒன்றாகும்.
மேலும் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறி சட்டத்துக்கு புறம்பாக 4 அணைகளை கட்டி உள்ளது. இதனை ஒன்றிய அரசாக பொறுப்பேற்ற பிஜேபி கட்சி கண்டுகொள்ளவில்லை சட்டத்தை பின்பற்றும், ஒன்றிய அரசுகளாக இருந்திருந்தால் சட்டத்திற்குப் புறம்பாக கட்டப்பட்ட அந்த அணைகளை உடைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு செய்யவில்லை தொடர்ந்து மேகதாதுவில் அணை கட்டப்படுமானால் தமிழ்நாட்டில் இருந்து படையை திரட்டி சென்று மேகதாது அணையை நிச்சயம் உடைப்போம் எனவும், ஜல்லிக்கட்டு பாரம்பரியத்திற்காக எங்கள் இளைஞர்கள் போராடிய போராட்டத்தை விட இது மிகப்பெரியதாக இருக்கும் எனவும் கூறினார்.
மேலும் தமிழக மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை கர்நாடகாவில் மேகதாது அணையில் ஒரு செங்கல் கூட கட்ட முடியாது என கூறியிருப்பது, போலி நாடகம் ஆடுவதுடன் இது முற்றிலும் கோமாளித்தனமான பேச்சாகும் எனவும் சாடினார், அவர்களுடைய கட்சியின் ஆட்சிதான் கர்நாடகாவில் நடைபெறுகிறது.
அவருடைய கட்சியின் ஆட்சிதான் இந்திய பிரதமராக மோடி இருந்து வருகிறார். அவர்களிடம் கூறி உடனடியாக அந்த அணை கட்டுவதை நிறுத்து பேசுவதை விட்டு தற்போது இவ்வாறு அறிக்கை விடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. மேலும் ஒன்றிய அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மோடியிடம் பேசி அண்ணாமலை உரிய நடவடிக்கைகள் நியாயமான முறையில் எடுக்கும் பட்சத்தில் அண்ணாமலை அவர்களை மதிக்கிறோம் வணங்குகிறோம் என கௌதமன் கூறினார்.