வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து: மறுபரிசீலனை செய்ய விஜயகாந்த் கோரிக்கை

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள்‌ ஒதுக்கீடு ரத்து செய்த நிலையில், அதனை மறுபரிசீலனை செய்யுமாறு, விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.;

Update: 2021-11-02 11:57 GMT

விஜயகாந்த்

இதுகுறித்து, தேமுதிக தலைவரும் பொதுச்செயலாளர்‌ விஜயகாந்த்‌ இன்று வெளியிட்ட அறிக்கை கூறியிருப்பதாவது: மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில்‌, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீடு வழங்கி, அதிமுக அரசு சட்டம்‌ இயற்றியது.

எனினும், இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில்,‌ சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பிறகே, இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்‌ எனக்கூறி, வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீட்டை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.

தேர்தலுக்காகவும்‌, கூட்டணிக்காகவும்‌ மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகத் தேர்தலுக்கு முன்பே நான்‌ சொன்னது தற்போது உண்மையாகியுள்ளது. இருப்பினும்‌ 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீட்டை நீதிமன்றம்‌ ரத்து செய்திருப்பது, வன்னிய சமூக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இடஒதுக்கீடு விவகாரத்தில்‌ வழங்கப்பட்ட தீர்ப்பை, நீதிமன்றம் மறுபரீசிலனை செய்து, அனைத்துத் தரப்பு மக்களும்‌ பயனடையும்‌ வகையில்‌ தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News