வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு கிடையாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது;
சுப்பரீம் கோர்ட் (பைல் படம்)
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியது. இந்த மசோதாவை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அரசாணையை ரத்து செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, பாமக ஆகியவை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது என்பதும் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் மற்றும் பி.எல்.கவாய் ஆகியோர் வழங்கிய நிலையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்று தீர்ப்பளித்தது. 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
10.5% உள் ஒதுக்கீடு செல்லாது என உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாமக, தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.