உள்ளாட்சித்தேர்தல் அமமுக நிலை: பரபரப்பான முடிவை அறிவித்தார் டிடிவி

வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக தனித்து போட்டியிடும் என்று, அதன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Update: 2022-01-27 11:00 GMT

டிடிவி தினகரன்

தமிழத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிலைப்பாடு குறித்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அதன் பொதுச் செயலாளர் டி.டி வி. தினகரன் தலைமையில் இன்று நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பின்னர், நிருபர்களிடம் பேசிய டிடிவி தினகரன் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் அமமுக தனித்து போட்டியிடும். வேட்பாளர்களின் தேர்வு ஏற்கனவே நடைபெற்று விட்டது.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தாலும், மீண்டும் மீண்டும் போட்டியிடுவோம். தேர்தல் என்பது ஜனநாயக போர்க்களமே. தோல்வி அடைந்துவிட்டால், வீட்டில் படுத்து தூங்க முடியாது. கடைசி மூச்சு வரை போராடுவோம். அதிமுகவினர் தைரியமின்றி உள்ளனர். இது, குழந்தைக்குக்கூட தெரியும். அதைதான் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாக, டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Tags:    

Similar News