திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை அண்ணா நினைவு நாள்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

Update: 2024-02-02 10:56 GMT

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா.

தி.மு.க. நிறுவன தலைவர்களில் ஒருவரும் தமிழக முன்னாள் முதல்வருமான அண்ணாவின் 55 வது நினைவு தினம் நாளை தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. தனது பேச்சாற்றல் எழுந்தாற்றலால் தமிழகத்தில் ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி தனது கட்சியை ஆட்சியில் அமர்த்தியவர் அண்ணா. அவர் முதல் அமைச்சராக பதவி ஏற்ற இரண்டரை ஆண்டுகளில் மரணத்தை தழுவினாலும் இன்று வரை அண்ணா துவங்கிய தி.மு.க.வும், அதில் இருந்து  பிரிந்து சென்ற எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க.வும் தான் மாறி மாறி ஆட்சி கட்டிலில் அமர்ந்து வருகின்றன. இதன் காரணமாக அண்ணா நினைவு நாளை இந்த இரு கட்சிகளும் அனுசரித்து வருகிறார்கள்.

முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி.

அண்ணா நினைவு நாள் தொடர்பாக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார்  ஆணைக்கிணங்க பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 55-வது நினைவு தினமான நாளை (3.2.2024- சனிக்கிழமை)  திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருவுருவச் சிலைகளுக்கும்; ஆங்காங்கே பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப் படங்களை வைத்து மலர் அஞ்சலி செலுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

03.02.2024, சனிக்கிழமை கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன்.(திருத்தப்பட்ட இடங்கள்)

காலை 9.00மணி: அல்லித்துறை அண்ணா சிலை

காலை 10.00மணி: முசிறி அண்ணா சிலை

காலை 11.00மணி: துறையூர் அண்ணா சிலை

அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News