திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2024-08-29 14:00 GMT

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் முதன்மை செயலாளர் கே என்  நேரு பேசினார்.

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கேஎன் நேரு சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு பேசினார்.

இந்த கூட்டத்தில் திமுக முப்பெரும் விழாவை திருச்சி மத்திய மற்றும் வடக்கு  மாவட்டங்களில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர ,பேரூர், கிளைக் கழகங்கள் மற்றும் பகுதி, மாநகர பகுதிகளில் சிறப்பாக கொண்டாடுவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை இரண்டு மாவட்டங்களிலும் மிகச் சிறப்பாக கொண்டாடுவது, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட்ட கழக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன் அடுத்து 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள  சட்டமன்ற தேர்தலிலும் கழகம் அறிவிக்கும் வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ மற்றும் அருண் நேரு எம்பி, எம்எல்ஏக்கள் ஸ்டாலின் குமார், பழனியாண்டி, கதிரவன் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், அவைத்தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம் ,அம்பிகாபதி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News