BJP Protest Today | சென்னை தலைமைச்செயலகம் நோக்கி இன்று பாஜக பேரணி

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க தமிழக அரசை வலியுறுத்தி பாஜக சார்பில், அண்ணாமலை தலைமையில் இன்று பேரணி நடைபெறுகிறது.;

Update: 2022-05-31 02:45 GMT

மத்திய அரசு கடந்த மாதம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு ரூ. 7; பெட்ரோல் விலை ரூ.9.50 காசுகள் குறைக்கப்பட்டன. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பெட்ரோல் - டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்காததை கண்டித்து, பாஜக சார்பாக இன்று பேரணி நடத்தப்படுகிறது. தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், தலைமை செயலகத்தை நோக்கி இன்று காலை 10 மணிக்கு பேரணி நடைபெற உள்ளது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து, இப்பேரணி துவங்குகிறது.

Tags:    

Similar News