புகார் அளிக்க வந்த திமுக.கொலை மிரட்டல் விடுத்த அஇஅதிமுக -காவல் நிலையம் முன்பு தர்ணா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்;
சங்கரன்கோவிலில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த திமுக நகர செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த அஇஅதிமுக பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி திமுகவினர் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி உட்பட்ட ராமசாமியபுரம் 2 வது தெருவில் வசித்து வரும் அதிமுக முன்னாள் நகர்மன்ற செயலாளர் கண்ணன் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலினை அவதூறாக பேசியதுடன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தாக கூறி சங்கரன்கோவில் திமுக நகர செயலாளர் சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்..
இதனையடுத்து அதே போல் திமுகவினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தாகவும் கூறி தனது ஆதரவாளர்கள் உடன் வந்த அதிமுக முன்னாள் நகர் மன்ற தலைவரும் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் கண்ணன் என்ற ராஜூ நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார்.
அப்போது இரு தரப்பினரும் காவல் நிலையம் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தஅதிமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் கண்ணனை கைது செய்ய வேண்டும் என கூறி திமுகவினர் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது மேலும் சம்பவ இடத்திற்கு வந்த டி எஸ் பி பாலசுந்தரம் புகார் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்த கலைந்து திமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் காவல் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் அதிமுக பிரமுகர் மது போதையில் இருந்தாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்னர்.
இதனை தொடர்ந்து சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் அதிமுக பிரமுகர் கண்ணன் என்ற ராஜு மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்