முதலமைச்சர் தலைமையில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு விழா
சென்னையில் இன்று நடந்த முதலீட்டாளர்கள் விழா ஒன்றில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ரூ.17,141 கோடி முதலீட்டில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.;
சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு விழா நடைபெற்றது
சென்னை கிண்டியில் இன்று நடந்த முதலீட்டாளர்கள் விழா ஒன்றில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு விழா நடைபெற்றது. கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் ரூ.28,508 கோடியிலான 49 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய திட்டங்களால் 83,482 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என கூறப்படுகிறது
கிண்டியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்த விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு' என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த விழா தமிழக தொழில்துறையில் ஒரு முக்கிய மைலகல்லாக பார்க்கப்படுகின்றது.
தமிழக தொழில்துறையின் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழில்துறை முதன்மை செயலாளா் முருகானந்தம், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூஜா குல்கா்னி மற்றும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.